குமரியில் கந்துவட்டி கொடுமையால் பேருந்து உரிமையாளர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் மினி பேருந்து உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் நடவடிகை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் விஜிதா என்ற தனியார் மினி பேருந்து உரிமையாளரான விஜயகுமார். இவர் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் மினி பேருந்திற்காக ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் தனது பேருந்தை வாங்கிய அருண் பிரகாஷ் என்பவர் முறையாக நிதி நிறுவனத்திற்கு கடன் தொகையை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு எட்டு லட்சம் ரூபாய் கேட்டு நிதி நிறுவன உரிமையாளர், நிதி நிறுவன ஊழியர் விஜயகுமாருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மனம் உலைச்சலில் இருந்த விஜயகுமார் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்திருந்தனர்.
புதுவையில் 64வயது மூதாட்டியுடன் உறவில் ஈடுபட்டு கம்பி எண்ணும் வட மாநில இளைஞர்
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயகுமார் உயிரிழந்தார். இது தொடர்பாக விஜயகுமாரின் மகன் வினோத் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் நிதி நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் என 3பேர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.