6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதா? அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை

கருக்கலைப்புக்குக் கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

Maduravoyal Police brought actress Vijayalakshmi for medical examination sgb

சீமான் மீது பாலியல் புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியை இன்று காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

2011ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று  நடிகை விஜயலட்சுமி கூறியிருக்கிறார். அவரது புகாரின் பேரில் சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், போலீசார் சீமானை கைது செய்யவில்லை. இந்நிலையில் சீமானை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்படி, போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அனைவரும் உதயநிதியுடன் நிற்போம்! இந்தியா என்ற பெயரே சரி! இறங்கி அடிக்கும் இயக்குநர் வெற்றிமாறன்!

Maduravoyal Police brought actress Vijayalakshmi for medical examination sgb

கடந்த இரண்டு நாட்களாக கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டார். திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிமன்றத்திலும் விஜயலட்சுமியின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விஜயலட்சுமி தனது புகாரில் சீமான் தன்னை 6 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதன்படி, இன்று (வியாழக்கிழமை) மதுரவாயல் போலீசார் விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

கருக்கலைப்பு செய்த மருத்துவர், கருக்கலைப்பு செய்வது தொடர்பாக கையெழுத்திட்ட நபர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பெரிய ரோஜாப்பூ டிரஸ்... ஹாட் மூடில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா ஆனந்த்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios