அனைவரும் உதயநிதியுடன் நிற்போம்! இந்தியா என்ற பெயரே சரி! இறங்கி அடிக்கும் இயக்குநர் வெற்றிமாறன்!

அனைவரும் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்க வேண்டும் என்றும் தானும் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Everyone must Stand with Udayanidhi Stalin! India is the right name! Director Vetrimaran sgb

சனாதனம் பற்றிப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அனைவரும் நிற்க வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்போவதாக எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார்.

"சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் கேள்விகள் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அதை மறுப்பது எதுவாக இருந்தாலும், அது எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும், வீழ்த்துவதும், சுதந்திர மனிதர்களாக, விடுதலை விரும்பும் மனிதர்களாக, நம் அனைவரின் கடமை." என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த உணர்வு இருக்கும் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர் சொன்ன கருத்துக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

சட்டத்துக்கு உட்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயார்! ராஜீவ் குமார் அறிவிப்பு

பின் இந்தியா - பாரத் பெயர் மாற்ற சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த வெற்றிமாறன், "எனக்கு இந்தியா என்கிற பெயரை போதுமானதாக உள்ளது. சரியானதாகவும் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Everyone must Stand with Udayanidhi Stalin! India is the right name! Director Vetrimaran sgb

கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்" என்றார்.

சனாதனம் பற்றிய பேச்சுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்! உதயநிதிக்கு பிரதமர் மோடி சவால்!

தொடர்ந்து பேசிய அவர், "கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டியது." என்று வலியுறுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருப்பதாவும் பல முறை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சனாதனம் குறித்த பேச்சுக்காக டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதிக்கு ஆதரவாகப் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியக் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளோட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 260க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

ஒபாமாவுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்! 1999 இல் நடந்த சம்பவத்தை போட்டு உடைத்த லாரி சின்கிளேர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios