ஒபாமாவுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்! 1999 இல் நடந்த சம்பவத்தை போட்டு உடைத்த லாரி சின்கிளேர்!
1999 ஆம் ஆண்டில், ஒபாமா கோக்கைன் வாங்குவதற்கு தான் 250 டாலர் கொடுத்ததாகச் சொல்கிறார் லாரி சின்கிளேர். அப்போது போதையில் இருவரும் உடலுறவு கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீது போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் தொடர்பு போன்ற பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளியிட்டவர் லாரி சின்கிளேர். இவர், முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரான டக்கர் கார்ல்சனுக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கியுள்ளார்.
அந்த நேர்காணல் தற்போது ஒளிபரப்புக்குத் தயாராகி வருகிறது. முன்னோட்டமாக, நேர்காணலில் இருந்து ஒரு சிறிய வீடியோவை கார்ல்சன் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
லாரி சின்கிளேர் நீண்ட காலமாக அவரும் ஒபாமாவும் ஒன்றாக கோக்கைன் வாங்கி பயன்படுத்தியதாக கூறிவருகிறார். இந்நிலையில், இப்போது 1999 இல் ஒரு நாள் முழு போதையில் இருவரும் பாலியல் உறவு கொள்ளும் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இருப்பினும், சின்க்ளேர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை படம் பிடித்த நாசாவின் ஆர்பிட்டர் சாட்டிலைட்!
ஆரம்பத்தில் 2008ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின்போது ஒபாமா மீது குற்றச்சாட்டுகளைக் கூறினார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தினார். இறுதியில் நிலுவையில் இருந்த திருட்டு வழக்கு ஒன்றில் சின்கிளேர் கைது செய்யப்பட்டார்.
கார்ல்சன் வெளியிட்ட ட்விட்டர் வீடியோவில், சின்க்ளேர், 1999 ஆம் ஆண்டில், ஒபாமா கோக்கைன் வாங்குவதற்கு தான் 250 டாலர் கொடுத்ததாகச் சொல்கிறார். இந்த கோகைன் போதைப்பொருள் பயன்பாடு இருவருக்கும் இடையே உடலுறவு கொள்ளும் வரை போய்விட்டது.
ஒபாமா வாலிபர்களுடன் உடலுறவு கொள்வதாக நம்பத்தகுந்த தகவல் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் சின்கிளேன் பேட்டியில் குறிப்பிடுகிறார்.
சின்க்ளேர் ஒரு நீண்ட குற்றப் பின்னணி கொண்டவர். மோசடி, திருட்டு என பல குற்றச்சாட்டுகளின் கீழ், அரிசோனா, புளோரிடா மற்றும் கொலராடோ ஆகிய இடங்களில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டில், சின்க்ளேர் ஒபாமா குறித்த குற்றச்சாட்டுகளை முதன்முதலில் முன்வைத்தார். ஆனால், சின்கிளேர் தனது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை என்று பல பிரதான ஊடகங்கள் அதை வெளியிடாமல் புறக்கணித்தன.
இந்தோனேஷியா சென்று அவசரமாகத் திரும்பும் பிரதமர் மோடி! காரணம் என்ன தெரியுமா?