இந்தோனேஷியா சென்று அவசரமாகத் திரும்பும் பிரதமர் மோடி! காரணம் என்ன தெரியுமா?
இந்தோனேஷியா செல்லும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சந்திப்புகள் போன்ற பயணத் திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி இன்று, அமைச்சர்கள் குழுக் கூட்டத்திலும், கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்றார். தனது இந்தோனேஷியா பயணத்தை முன்னிட்டு இரவு 7:30 மணி வரை மீண்டும் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளார். பின், ஜகார்த்தாவுக்குச் தன் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஜகார்த்தாவுக்கு புறப்படுவார். அவர் சுமார் 7 மணிநேரம் விமானத்தில் பயணித்து செப்டெம்பர் 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஜகார்த்தா சென்றடைவார்.
இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு அவர் ஆசியான் இந்தியா உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று உச்சிமாநாட்டில் பங்கேற்பார். காலை 8:45 மணிக்கு, அவர் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பார்.
இந்த மாநாடுகள் முடிந்த முடிந்த உடனேயே, பிரதமர் மோடி நாடு திரும்புகிறார். காலை 11:45 மணிக்கு டெல்லிக்கு விமானத்தில் கிளம்பும் அவர், மாலை 6:45 மணிக்கு தலைநகர் டெல்லியை மீண்டும் வந்தடைவார்.
செப்டம்பர் 8ஆம் தேதி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச உள்ளார். பைடன் உள்ளிட்ட மூன்று நாடுகளின் தலைவர்களுடன் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் நடத்த இருக்கிறார்.