BJP Candidate : கோ பேக் மோடி என பதிவிட்டு போஸ்ட் போட்ட மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன்..!அண்ணாமலை ஷாக்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மதுரை பாஜக வேட்பாளர் ராமஶ்ரீநிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் மோடியின் படத்தை பதிவிட்டு கோ பேக் மோடி என பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Madurai BJP candidate who posted Go Back Modi on his social media KAK

கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியோடு நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை வீதி, வீதியாக கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மதுரை பாஜக வேட்பாளர ராம சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் கோ பேக் மோடி என பதிவு செய்திருப்பது பாஜகவினரை மட்டுமில்லாமல் அண்ணாமலையையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  பாஜக மாநில துணை தலைவராக இருப்பவர் ராம சீனிவாசன் இவர் திருச்சி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்கு பாஜகவில் உள்ள நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். 

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவிற்கு 10 ஓட்டுகள் கூட விழாது... தேர்தலில் நாடகம் போடும் எடப்பாடி- உதயநிதி

Madurai BJP candidate who posted Go Back Modi on his social media KAK

கோடி பேக் மோடி என பதிவிட்ட பாஜக வேட்பாளர்

இந்தநிலையில் ராம சீனிவாசனுக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சு வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சரவணன், நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இந்த 3 வேட்பாளர்களையும் ஓவர் டேக் செய்து ராமசீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் மோடியுடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கோ பேக் மோடி, நரேந்திர மோடி,. பாஜக இந்தியா என பதிவு செய்திருந்தார். அதில் குறிப்பாக கோ பேக் மோடிக்கு பக்கத்தில் நெருப்பு புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.

Madurai BJP candidate who posted Go Back Modi on his social media KAK

பதிவை திருத்தி ராம சீனிவாசன்

இந்த பதிவை பார்த்த பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ராம சீனிவாசனை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த ராம சீனிவாசன் உடனடியாக அந்த பதிவை மாற்றியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த பதிவில் உள்ள எழுத்துக்களை நீக்கவிட்டு one nation one thougt என பதிவு செய்துள்ளார். இருந்த போதும் அந்த படத்திற்கு கீழே பழைய டுவிட்டின் படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக ராம சீனிவாசனின் ஆதரவாளர்களிடம் கேட்ட போது தவறுதலாக கை தவறி பதிவாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

மத்தியில் இழுபறி வந்தால் யாருக்கு ஆதரவு? பாஜகவுக்கா? எடப்பாடி பழனிசாமி கொடுத்த பரபரப்பு பதில்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios