நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது பாதுகாவலருக்கு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
HC grant conditional bail to Seeman's security: சீமான் மீது திரைப்பட நடிகை அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
இது தொடர்பான சம்மனை சீமானின வீட்டு வாசலில் ஒட்டுவதற்கு காவல் துறையினர் அங்கு சென்றனர். சீமான் வீட்டு கதவில் காவல் துறையினர் சம்மனை ஒட்டிய நிலையில், அதனை கிழித்ததாக, சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் முன்னாள் ராணுவ வீரரான பாதுகாவலர் அமல்ராஜ் புகார் எழுந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசாரை இருவரும் தாக்க முயன்றாக கூறப்பட்டது. இது தொடர்பாக நீலாங்கரை காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் தங்கள் மனுவில், அரசியல் உள்நோக்கில் தாங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது எனவும் கூறினர். மேலும், துப்பாக்கி வைத்திருக்க உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது.
சிறையில் சீமான் வீட்டு காவலாளி, உதவியாளர் - கொந்தளிக்கும் நாம் தமிழர் தம்பிகள்
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம், சம்மனை கிழித்தனர். அப்போது, காவல் ஆய்வாளரை அவர்கள் இருவரும் தாக்கியதாக கூறினார். பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி ஒருவேளை வெடித்திருந்தால் துரதிர்ஷ்டவசமான அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் எனக்கூறினார். சொந்த பாதுகாப்புக்காக துப்பாக்கியே தவிர அடுத்தவர்களை மிரட்ட துப்பாக்கி வைத்திருக்க அனுமதியில்லை எனவும், காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீனில் வெளியில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இருவர் மீது வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை எனவும் வாதத்தை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின் கருத்து தெரிவித்த நீதிபதி, துப்பாக்கி உரிமையை மீறியிருந்தால் அதனை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்கலாம். மற்றபடி இருவரையும் இதற்கு மேல் சிறையில் வைக்க தேவையில்லை எனக்கூறி, இருவருக்கும் ஜாமீன் வழங்கினார்.
அத்துடன், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தார்.
போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது ஏன்.? Sorry கேட்டது ஏன்.? சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு தகவல்
