மகனை ஸ்கூலில் விட்டுவிட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பிய தாய்.. தலை நசுங்கி உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
ராஜேஸ்வரி ஸ்கூட்டியில் தனது மகனை அழைத்துச் சென்று மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி (41). கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி ஸ்கூட்டியில் தனது மகனை அழைத்துச் சென்று மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர் லாரியின் பின் சக்கரம் ராஜேஸ்வரி தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- Anna University: மாணவர்களுக்கு குட்நியூஸ்.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிகவேகமாக லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.