Anna University: மாணவர்களுக்கு குட்நியூஸ்.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.

Anna University exam fee hike temporarily suspended tvk

அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் – மே மாதத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்விற்கு தயாராகி வரும் நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்டண உயர்வுக்கு டிடிவி.தினகரன், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு.! ஏழை, எளிய மாணவர்கள் மீது கூடுதல் சுமை- டிடிவி தினகரன்

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திரும்பி தர துணை வேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios