நீண்ட கால சிறைவாசிகள்.. வைக்கப்பட்ட கோரிக்கை.. நிறைவேற்றிய நீதியரசர்கள் - மகிழ்ச்சில் குடும்பத்தினர்!
Long Term Prisoners : தமிழகத்தில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறைக்கைதிகள் சிலர் ஒரு சில கோரிக்கைகளை நீதியரசர்கள் முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இப்பொது ஒரு நல்ல பதில் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறைக் கைதிகள் முசிலர், ன்கூட்டியே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு கொடுத்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் கொடுத்திருந்த வழக்கு இன்று ஜனவரி 11ம் தேதி நீதியரசர்கள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அவர்களுடைய வழக்கை விசாரித்த நீதியரசர்கள் இன்று ஜனவரி 11ம் தேதி வழங்கிய ஆணையின் அடிப்படையில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் ஐந்து பேருக்கு (அந்த ஐவரில் 3 பேர் இஸ்லாமியர்கள் என்றும் 2 பேர் ஹிந்துக்கள் என்று தகவல் கிடைத்துள்ளது) தலா மூன்று மாதம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்! அறிவிப்பு எப்போது?
அதுமட்டுமல்லாமல் இதேபோல மனு அளித்திருந்த மேலும் 12 பேருக்கு 40 நாள் விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்காலிகமாக வெளியில் செல்லும் இவர் இந்த விடுப்பு காலத்தில் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் இருக்க முடியும், அதே போல மாதம் ஒரு முறை மட்டும் தங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழக அரசின் வாதத்திற்கு பிறகு நீதியரசர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளனர். நீண்ட கால சிறைவாசிகளின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறியதில் விடுப்பில் வெளியேறும் கைதிகளின் குடும்பத்தார் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் என்றே கூறலாம்.
'ஶ்ரீராமன் தீவிர அசைவப் பிரியர்!' புதிய சர்ச்சையை பற்ற வைத்த கார்த்தி சிதம்பரம்!