விரைவில் தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்! அறிவிப்பு எப்போது?
கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் எழு புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காகவும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த புதிய மாவட்டங்களைப் பிரிக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவெடுத்தன.
முன்னதாக, நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37) என 5 புதிய மாவட்டங்கள் உருவாயின.
உ.பி.யில் ஸ்டேட் வங்கிக்குள் புகுந்து அலப்பறை செய்த காளை மாடு!
இந்த ஐந்து மாவட்டங்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டன. ஐந்து புதிய மாவட்டங்களுக்கும் அதே ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
பிறகும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தனி மாவட்டம் கோரி அரசிடம் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வண்ணமயமாக மாறும் வாட்ஸ்ஆப்! 5 கலர் ஆப்ஷனுடன் புதிய அட்பேட் ரெடி!