ராமனிடம் கபந்தன் சொன்னபடி, மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும், மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை என்று கார்த்தி சிதம்பம் தனது பதிவில் எடுத்துரைத்துள்ளார்.

ராமாயணத்தில் ஶ்ரீராமர் தீவிர அசைவப் பிரியர் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதே பொன்ற காரணத்துக்காக நயன்தாராவின் அன்னபூரணி படம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் பதிவு வெளியாகி இருக்கிறது.

நடிகை நயன்தாரா முக்கியப் பாத்திரத்தில் நடித்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இந்தப் படம் டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து இந்தப் படத்தில் இந்துக் கடவுளான ராமர் அசைவம் சாப்பிட்டதாக ஒரு வசனம் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதற்கு இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் மைக்ரோசாப்ட்! ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!

Scroll to load tweet…

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

“வால்மீகி எழுதிய இராமாயணத்தில் பல இடங்களில் ஸ்ரீராமன் தீவிரமான அசைவப் பிரியர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்” எனக் கூறியுள்ள கார்த்தி சிதம்பரம், “நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்; ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் வீடாக்கித் தின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த ராமன் மாமிச உணவைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ராமனிடம் கபந்தன் சொன்னபடி, மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும், மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை என்றும் அவர் தனது பதிவில் எடுத்துரைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, வேடன் குகன் ராமனுக்கு தேனும் மீனும் உணவாகக் கொடுத்ததை கம்பராமாயணப் பாடல் விளக்குகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

வரும் 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ராமர் தொடர்பான சர்ச்சைகள் சூடுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்! இஸ்ரோவின் அடுத்த சாதனை