Asianet News TamilAsianet News Tamil

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் மைக்ரோசாப்ட்! ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மைக்ரோசாப்ட்டின் மதிப்பைவிடக் குறைந்துள்ளது. 2.887 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட்டை விட 0.3 சதவீதம் குறைவான மதிப்புடன் உள்ளது.

Microsoft Overtakes Apple As World's Most Valuable Company sgb
Author
First Published Jan 11, 2024, 10:20 PM IST

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. விற்பனையில் சரிவுடன் 2024ஆம் ஆண்டைத் தொடங்கியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் பின்தங்கியிருக்கிறது.

வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் பங்குகள் 1.5% உயர்ந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை 2.888 டிரில்லியன் டாலராகக் கூட்டியிருக்கிறது. இந்த வளர்ச்சி மைக்ரோசாஃப்ட்க்கு செயற்கை நுண்ணறிவுத் துறை முதலீட்டாளர்களை ஈர்க்க உதவி இருக்கிறது.

2.887 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட்டை விட 0.3 சதவீதம் குறைவான மதிப்புடன் உள்ளது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மைக்ரோசாப்ட்டின் மதிப்பைவிடக் குறைந்துள்ளது.

வண்ணமயமாக மாறும் வாட்ஸ்ஆப்! 5 கலர் ஆப்ஷனுடன் புதிய அட்பேட் ரெடி!

Microsoft Overtakes Apple As World's Most Valuable Company sgb

மைக்ரோசாப்டின் 1.8 சதவீத உயர்வுடன் ஒப்பிடும்போது, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட குபெர்டினோ நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஜனவரியில் இதுவரை 3.3% சரிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பலவீனம் அடைந்திருப்பதற்கு அதன் மிக அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கும் ஐபோனின் விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பது முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை அதிக அளவு சரிந்துள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளிலும் சீனாவில் இதே போக்கு இருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஹவாய் மற்றும் சீன-அமெரிக்கா இடையேயான பதட்டங்களும் இதற்கு மறைமுகக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

டிசம்பர் 14 அன்று 3.081 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டு 48% லாபத்துடன் முடிவடைந்தன. மைக்ரோசாப்ட்டின் 57% உயர்வை விட இது குறைவாக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் ChatGPT தயாரிப்பாளரான OpenAI உடன் இணைந்ததன் மூலம் மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவுத் துறை முதலீடுகளை ஈர்த்தது.

எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்! இஸ்ரோவின் அடுத்த சாதனை!

Follow Us:
Download App:
  • android
  • ios