நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்: முதல்வர் ஸ்டாலின்!
நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர் என வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர் என வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் இந்த தேர்தல். பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்களியுங்கள். நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர்.” என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024: பட்டாசு கடைகளை மூட உத்தரவு!
மேலும், திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியுள்ள அவர், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பெயர்களையும், சின்னங்களையும் கூறி அதற்கு பொதுமக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.