Exit Poll Survey : IPDS வெளியிடும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு!
Exit Poll Survey : மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று மாலையுடன் முடிவடையவுள்ள நிலையில், பிரபல IPDS நிறுவனம் தனது முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் துவங்கியது. இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடந்த 2 மாத காலமாக 7 கட்டமாக இந்த வாக்கு பதிவுகள் நடைபெற்று வந்தது. சில இடங்களில் பதட்டமான சூழல் நிலவினாலும், பல இடங்களில் வாக்கு பதிவு நல்ல முறையில் நடந்து முடிந்தது.
7ம் கட்ட வாக்கு பதிவு
இன்று ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது. உத்தர பிரதேச மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும், பீகாரில் 8 தொகுதிகளிலும், ஒடிசாவில் 6 தொகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும் சண்டிகர் மற்றும் யூனியன் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதியிலும் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 6 மணியுடன் இந்த வாக்குப்பதிவுகள் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் இந்த மக்களவைத் தேர்தலுக்காக நடத்தப்படும் இறுதி கட்ட வாக்குப்பதிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கையானது துவங்கும் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
IPDS வெளியிடும் கருத்து கணிப்பு
கடந்த 2004ம் ஆண்டு மாணவர்கள் உருவாக்கிய IPDS நிறுவனம் வெளியிடும் முதல் EXIT POLL SURVEY, (தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு) சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று 01/06/2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகும்.
Heat Wave : ஒரே நாளில் 61 பேர் பலி.!! கடுமையான வெப்ப அலை... கோடையில் இனி தேர்தல் கூடாது- ராமதாஸ்