அமெரிக்காவிற்கு பறக்க திட்டமிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..! மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு.?
தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு செல்ல அனுமதி தருமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்த்த தமிழக அரசு
திமுக அரசு பதவியேற்று ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில், பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், தொழில் துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 68,375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும்,2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். மேலும் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 17,141 கோடி ரூபாய் முதலீடும், 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதே போல பல்வேறு நாட்டின் முக்கிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தாறுமாறாக அதிகரிக்கும் கொரோனா..இன்றைய பாதிப்பு நிலவரம் !
தங்கம் தென்னரசு அமெரிக்கா செல்ல அனுமதி
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் துபாய் சென்றிருந்தார்.துபாயில் நடைபெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் தமிழக அரசின் அரங்கை திறந்து வைத்தார். இதனையடுத்து அந்த நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார். துபாய் பயணத்தின் மூலமாக 6100 கோடி ரூபாய் முதலீடும் 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்து ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைவில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஜூலை மாதம் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுப்பட்டுள்ளது. இதற்க்கு மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் அமெரிக்கா பயணம்..?
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் செல்ல இருப்பதாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பாக கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
சின்னவர் என அழைக்க சொன்னேனா? இது என்ன புது பிரச்சனையா இருக்கு..ஷாக் ஆன உதயநிதி