சின்னவர் என அழைக்க சொன்னேனா? இது என்ன புது பிரச்சனையா இருக்கு..ஷாக் ஆன உதயநிதி

சின்னவர் என அழைக்க சொன்னதாக வெளியான தகவலால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
 

Udayanidhi has said that the DMK government is working as a government for the common people

ஒத்த செங்கலில் பரபரப்பை ஏற்படுத்திய உதயநிதி

 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு என  இரண்டு சட்ட மன்ற தேர்தலில் திமுக,  அதிமுகவிடம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து 2011 முதல் 2019 வரை இந்த இடைப்பட்ட 8 ஆண்டுகளில் திமுக சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்றம், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களும் திமுகவிற்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காக உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சியும் கூறினர். குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அதிமுக தான் அனைத்து முயற்சிகளும் எடுத்ததாக கூறிய நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஒத்த செங்கல் தான் உள்ளது என கூறி அனைவரையும் அசர வைத்தார். இந்த ஒத்த செங்கல் பிரச்சார கூட்டத்தில் காட்டி உதயநிதி பேசியது  தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?

Udayanidhi has said that the DMK government is working as a government for the common people

சின்னவர் உதயநிதி ஸ்டாலின்

இதனையடுத்து  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஸ்டாலினுக்கு போட்டியாக உதயநிதிக்கும் அதிகஅளவில் கூட்டம் கூடியது. இதனையடுத்து 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு திமுக ஆட்சி அமைத்தது. அப்போது உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது தனது முதலாம் ஆண்டை திமுக நிறைவு செய்துள்ள நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் உதயநிதியும் மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என கூறியிருந்தார். எனவே எந்த நேரத்திலும் உதயநிதி துணை முதலமைச்சர் அல்லது முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் உதயநிதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னை சின்னவர் என அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல் பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உதயநிதியை சின்னவர் எனக்கூறி அழைக்க தொடங்கினர். பல்வேறு இடங்களிலும் வரவேற்பு பலகையில் சின்னவர் என அச்சிடப்பட்டு வரவேற்றனர்.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா.? சஸ்பென்ஸ் வைத்து பேசும் ஜெயக்குமார்.!

Udayanidhi has said that the DMK government is working as a government for the common people

சின்னவர் என அழைக்க சொன்னேனா?

இந்த சம்பவத்தால் ஷாக் ஆன உதயநிதி இதற்க்கு தற்போது மறுப்பு தெரிவி்த்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் பகுதியில், கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு  தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிளிகளை வழங்கினார்.  அப்போது நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி,  திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும்,  திமுக ஆட்சி  மக்களுக்கான ஆட்சியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுக தேர்தல் வாக்குறுதி கூறிய பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் தன்னை சின்னவர் என நான் கூப்பிட சொன்னதாக தகவல் பரவி இருக்கிறது. இருக்கிற பிரச்சினையில் இந்த பிரச்சனை வேறையா என நகைச்சுவையாக கூறினார். நான் அப்படி சொல்லவே இல்லை எங்கே சென்றாலும் சின்னவர் சின்னவர் என அழைக்கின்றனர். பல்வேறு கூட்டங்களுக்கு செல்லும் போது  என்னை  மூன்றாம் கலைஞர், இளம் கலைஞர் என்றெல்லாம் என்னை அழைக்கின்றனர்.

என் மீது உள்ள அன்பு காரணமாக அப்படி அழைக்கின்றனர் ஆனால் என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துவதாக உள்ளதாக கூறினார். கலைஞருக்கு இணை கலைஞர் மட்டும்தான் இனி எத்தனை பேர் பிறந்து வந்தாலும் கலைஞர்,கலைஞர் மட்டும் தான் கலைஞர் பெயர் மாறாது என தெரிவித்தார். இங்கே உள்ளவர்களோடு வயது அனுபவத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நான் மிகவும் சின்னவன், அதனால் என்னை சின்னவன் என கூப்பிட சொன்னேன் ஆனால்  சின்னவர் என கூப்பிடுங்கள் என நான் கூற சொன்னதாக நினைத்துக் கொண்டு விட்டதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

திமுகவுக்கே சமூக நீதி பாடமா.? எடப்பாடியையும் அதிமுக உட்கட்சி பிரச்சனையையும் கொத்து பரோட்டா போட்ட டி.ஆர்.பாலு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios