Asianet News TamilAsianet News Tamil

30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் இன்று 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

late M S Swaminathan cremated with State honours vel
Author
First Published Sep 30, 2023, 4:40 PM IST

வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னை தேனாம்பேட்டை அடுத்த ரத்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 28ம் தேதி காலை 11.20 மணியளவில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் பொதுமக்கள் அச்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், வேளாண்மை, சுற்றுசூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் அவரது உடல் அவரால் தொடங்கப்பட்ட சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படிருந்தது. அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, சாமிநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

மதுரை - சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் நாளை முதல் மாற்றம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி ராமகிருஸ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சேலையில் தொட்டில் கட்டி விளையாடியபோது சோகம்; கழுத்து இறுகி சிறுவன் பரிதாபமாக பலி

இதனைத் தொடர்ந்து இன்று பகல் எம்.எஸ்சுவாமிநாதனின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 16 காவலர்கள் மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களில் 10 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios