சேலையில் தொட்டில் கட்டி விளையாடியபோது சோகம்; கழுத்து இறுகி சிறுவன் பரிதாபமாக பலி

வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

A boy who was playing at home in Chennai got his neck stuck in a saree and died vel

சென்னை கண்ணகி நகர், 54வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம், மகாலட்சுமி தம்பதி. இவர்களது இளைய மகன் செல்வா(வயது 12). தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் வீட்டில் குழந்தைகள் உறங்குவதற்காக கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டித் தொங்க விட்டுள்ளனர்.

வீட்டில் வேலாயுதம் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மகாலட்சுமி தனது மூத்த மகனுடன் வெளியில் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் சிறுவன் செல்வா சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்.

பிறந்தநாளுக்காக கோவிலுக்கு வந்த எச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பிய பாஜக தொண்டர்கள்

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் செல்வா சுயநினைவின்றி இருப்பதை அண்ட அவரது உறவினர் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகி நகர் காவல் துறையினர் செல்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios