கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 5வது அணு உலைக்கான முக்கிய உபகரணங்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைக்கான பணிகள் 80% முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைகளின் பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. சுமார் ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணுஉலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த ரோசாட்டம் நிறுவனம் இந்த ஆலையை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. ரஷ்யாவில் இருந்து 5வது உலைக்கான முக்கிய உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பிரஷரைசர் அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க : 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு..

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 5வது அணு உலைக்கான முக்கிய உபகரணங்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ரஷ்யாவின் ஒருங்கிணைந்த அணுசக்தி மையமான ரோசாட்டம், தற்போது ரியாகடர் பிரஷர் வெசல் மற்றும் 4 ஸ்டீம் ஜெனரேட்டர்களை அனுப்பி உள்ளது. ரோசாட்டமின் இயங்கிரங்களை உருவாக்கும் பிரிவான ஆட்டம்மேஷ் என்ற அமைப்பு, இந்த முக்கிய உபகரணங்களை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது.

5 மற்றும் 6வது அணு உலைகளில் 2027-28-ல் மின் உற்பத்ட்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 6 யூனிட்களிலும் மின் உற்பத்தி செய்யப்படும் போது, மொத்தமாக 6,000 மெகாவாட் மின்சாரம் நாட்டிற்கு கிடைக்கும். 2035க்குள் 12 அணுமின் நிலையங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எல் நினோ தாக்கம்.. இந்தியாவில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துமா..? நிபுணர்கள் விளக்கம்..