12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு..

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

12th class results release date will be changed.. Minister Anbil Mahesh important announcement..

தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவடைந்த நிலையில் வினாத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக  தகவல் வெளியானது. மேலும் நீட் தேர்வு முடிந்து 2 நாட்களுக்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மே 7-ல் நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Breaking : முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்.. இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்

திட்டமிட்டபடி மே 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்றும், எனவே மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் மாற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுக்கு சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்செண்ட் ஆகினர். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆப்செண்ட் ஆன மாணவர்களை துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். 

இதையும் படிங்க : கலைஞரின் மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம்.? நான் கோபாலபுரத்து விசுவாசி- துரைமுருகன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios