கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக தவெக நீதிமன்றம் சென்றுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழ்ந்துள்ளனர். இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அதாவது சிகிச்சை பெற்று வந்த கவின் (34) என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நிலையில், உயிரிழப்புகள் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல்

உயிரிழந்தவர்களில் 6 குழந்தைகள், 16 பெண்கள், 10 ஆண்கள் என்பது உறுதியானது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியா முழுமையும் உலுக்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பலியானவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

புஸ்ஸி என்.ஆனந்த் மீது வழக்குப்பதிவு

பலியானவர்களின் குடும்பத்துக்கு தவெக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மற்றும் மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிபதியிடம் முறையீடு

இதற்கிடையே கரூர் சம்பவம் நடந்தவுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸு ஆனந்த், ரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் தலைமைறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் இல்லத்திற்குச் சென்று த.வெ.க. சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மதியம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.