கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கரூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறிவருகின்றனர். இந்நிலையில், இந்த அசம்பாவிதத்திற்கு முழுப்பொறுப்பும் தா.வெ.கா தலைவர் விஜய் ஏற்கவேண்டும் என்றும் அவர் கைது செய்யப்படவேண்டும் என மக்கள் கொந்தளிப்புடன் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

த வெ க கட்சியின் தலைவர் விஜய் தனது சமூக ஊடகத்தில் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சமும், அளிப்பதாக கூறியுள்ளார் அதோடு இதயமும், மனமும் கனத்து போகிறது, இதிலிருந்து நாம் அனைவரும் மீண்டு வருவோம் என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 நிதி உதவி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.