திமுக எம்.பி கனிமொழியின் தாய் ராசாத்தி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள். இவர் தனது மகளும், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியுடன் சென்னை சிஐடி காலனியில் வசித்து வருகிறார். ராசாத்தி அம்மாளுக்கு சமீப காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

அதாவது அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இதற்காக ஜெர்மனியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் இருந்த ராஜாத்தி அம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடல்நிலை எப்படி இருக்கு?

இதன் காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வயது மூப்பு காரணமாக ராசாத்தி அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்பு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.