வீல் சேரில் அத்தி வரதரிடம் வந்த ராசாத்தி அம்மாள்... டோட்டலா சரண்டரான கருணாநிதி குடும்பம்!!
துர்கா ஸ்டாலின் அத்திவாரதரை வழிபட்டுவிட்டு வந்து ஒருவாரம் ஆன நிலையில், தற்போது கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீல் சேரில் வந்து தரிசனம் செய்தார். மேலும், ஸ்டாலினின் அக்கா செல்வியும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜாஜி, காமராஜ் போன்ற அசைக்க முடியாத காங்கிரஸ் தலைவர்களின் செல்வாக்கிலிருந்து விடுபட வைத்ததே பகுத்தறிவு எனும் வாதம் தான். இந்த வாதத்தை முன் வைத்தே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் அசைக்க முடியாத மக்கள் தலைவராகினார்.கருணாநிதியும் மறையும் வரை அந்த கொள்கையில் விடாபிடியாக இருந்து வந்தார். ஆனால் கலைஞர் மரணிக்கும் சில நாட்களுக்குமுன்பு திமுக உபிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் படி ஏறி வழிபட்டனர்.
பூஜை, புனஷ்காரம், அபிஷேகம், தங்கள் தலைவர் நலம்பெற வேண்டி மனமுருகி நெக்குருகி வேண்டிக்கொள்கின்றனர். பூசாரி பூசாரிகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர். திருவாரூர், நெல்லை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் சிறப்பு பூஜைகளும் செய்தனர்.
என்னதான் தொண்டர்கள் தலைவர் கலைஞருக்காக செய்திருந்தாலும் அவர் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார், காரணம் முன்னாள் எம்.பி சங்கராபுரம் ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வேர்வையில் நனைந்து வழிந்தோடியபோது நெற்றியில் ரத்தம் சொட்டுகிறது என சொன்னவர் தான் கலைஞர், அதன்பின் வந்த விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை, இப்படி கடவுள் மறுப்பு விஷயத்தில் கறாராக இருந்து கருணாநிதியின் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதாக இணையத்தில் அவ்வப்போது செய்திகள் உலாவரும்.
திமுகவின் குடும்ப தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் இந்துப் பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குறிப்பிடுவார்கள். பண்டிகை பெயரைக் கூட அறிவிக்காமல், ஆனால் பண்டிகை நாட்களில் இந்துக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் ஒளிபரப்பி வரும் திமுக குடும்பம், கருணாநிதி மறைந்ததிலிருந்து வெளிப்படையாகவே கோவில் குளங்களுக்கு சென்று சிறப்பு பூஜா நடத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர், இந்தாண்டு வெளியே வந்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள், அத்திவரதரை தரிசிக்கும் பொருட்டு அத்திவரதர் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. அத்தி வரதரை தரிசிக்க பொதுமக்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். அத்தி வரதரைக் காண மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கு திமுக குடும்ப பெண்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் அத்திவரதர் உற்சவத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு வழிபட்டார். 8ஆம் நாள், திருவிழாவில், கலந்துகொண்ட துர்கா, தனது நெருங்கிய உறவினர்களுடன் விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்தார். வசந்த மண்டபத்திற்கு சென்ற துர்கா, அத்தி வரதர் சுவாமிக்கு பச்சைப் பட்டாடை, பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.
துர்கா ஸ்டாலின் வழிபட்டுவிட்டு வந்து ஒருவாரம் ஆன நிலையில், தற்போது கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீல் சேரில் வந்து தரிசனம் செய்தார். மேலும், ஸ்டாலினின் அக்கா செல்வியும் அத்திவாரதரை தரிசிக்க வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தல் சமயத்தில் இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சிதான் திமுக என்ற பிரச்சாரத்தை பிஜேபி முன்வைத்தது, இதற்கு விளக்கம் கொடுத்த ஸ்டாலின், எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர் என்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று டோட்டல் கருணாநிதி குடும்பமே சரண்டரானது அம்பலமாகியுள்ளது.