ராஜராஜ சோழன் இந்து மதமா? கமல் ஹாசன் சொன்ன பதில் இதுதான்!!
இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையானது. இதுக்குறித்து விழா ஒன்றில் அவர் பேசுகையில், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: தென்காசியில் மான் கறி வைத்திருந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்துவது என தமிழர்களின் அடையாளத்தை பறிக்கிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னனின் மதம் எது என்பது குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பலரும் இதுக்குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பூட்டியிருந்த பொறியாளர் வீட்டில் 90 சவரன் நகை திருட்டு
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், நேற்று பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். உடன் நடிகர்கள் கார்த்தி, விக்ரம் இருந்தனர். அப்போது அவரிடம் ராஜ ராஜசோழன் இந்து மதத்தைச் சேர்ந்தவரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல் ஹாசன், ''இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம், சைவம் என இருந்தன. இந்து மதம் என்பது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர். தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரிதான் இதுவும். எங்களுக்கு வெவ்வேறு மதங்கள் இருந்தன. கி.பி.8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மதம்னு ஸ்தாபிதம் செய்கிறார். இது சரித்திரம் சம்பந்தப்பட்டது. இதை இங்கே சொல்லக் கூடாது. இந்த படம் சரித்திரப் புனைவுபற்றியது. மொழி பிரச்சனையை இங்கே கொண்டு வரவும் வேண்டாம்'' என்றார்.