திருச்சியில் பூட்டியிருந்த பொறியாளர் வீட்டில் 90 சவரன் நகை திருட்டு
திருச்சியில் பூட்டியிருந்த அபுதாபி பொறியாளர் வீட்டில் 90 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு முதல் தெருவ சேர்ந்தவர் செந்தில் நாதன். அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி. இவர் மூன்று குழந்தைகளுடன் ராமலிங்க நகர் வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த 1ம் தேதி கனிமொழி குழந்தைகளுடன் சீர்காழியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது. படுக்கையறையில் அலமாறியில் இருந்த 90 பவுன் நகை, ரூ.70,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
பணியில் மெத்தனம்? தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோங்க - அமைச்ர் துரைமுருகன் ஆவேசம்
இது குறித்து கனிமொழி உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு தலைமையில் உறையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் பொன்னி உதவியிடன் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
வீட்டின் சி.சி.டி.வியில் பதிவாகி இருந்த ஹார்டு டிஸ்குகளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதையடுத்து வீட்டின் அருகில் உள்ள இதர சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 90 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வேலை தேடும் பெண்கள் தான் டார்கெட்; சென்னையில் விபசார கும்பல் அதிரடி கைது