கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை தொடர்பாக கலவரத்தை துண்டும் வகையில் பதிவிட்ட பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சூர்யா மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை தொடர்பாக கலவரத்தை துண்டும் வகையில் பதிவிட்ட பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சூர்யா மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி(17) என்ற மாணவி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி அதிகாலை மாணவி ஸ்ரீமதி, விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தத சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க;- அந்த மாணவி செத்து 5 நாளாவது ஒரு அமைச்சர் கூட ஆறுதல் சொல்ல போகல.. திமுக அரசை இறங்கி அடிக்கும் யுவராஜா.!
இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் தாய் குற்றம்சாட்டி வந்தார். 4 நாட்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டம் நேற்று திடீரென வன்முறை வெடித்தது. பள்ளி முன்பு நின்றிருந்த போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து வளாகத்தில் நிறுத்தியிருந்த பள்ளி பேருந்துகள், கார், டிராக்டர், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவைகளை தீவைத்து எரித்தனர். மேலும் வளாகத்தில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களையும் விட்டுவைக்கவில்லை. அவற்றையும் தீக்கிரையாக்கினர். பின்னர் வகுப்பறைகளுக்குள் புகுந்து ஸ்மார்ட் போர்டு, கணினி, பெஞ்ச், சேர் ஆகியவற்றையும் நொறுக்கினர். பள்ளி கட்டிடத்திற்கும் தீ வைத்தனர். இதில், பல வகுப்பறைகள் தீக்கிரையாயின. பள்ளி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானது.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட திமுக அரசு செய்த நான்கு தவறுகள் என்னென்ன.? பட்டியலிட்டு விளாசிய தமிழக பாஜக.!
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பாக வேதியியல் மற்றும் கணித ஆசிரியைகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண சம்பவம் தொடர்பாக முகநூலில் பதிவிட்டு வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சூர்யா மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.