கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட திமுக அரசு செய்த நான்கு தவறுகள் என்னென்ன.? பட்டியலிட்டு விளாசிய தமிழக பாஜக.!
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத வெட்கக்கேடான அவல நிலையில் தமிழக அரசும், காவல்துறையும் முடங்கிப்போய் உள்ளது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையும் வந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுக ஆட்சி வந்தது முதலே இப்படித்தான் நடக்குது.. போட்டுத்தாக்கிய வானதி சீனிவாசன்!
பெரும் கலவரமாக இந்த நிகழ்வு நடந்தேறியுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் அரசை விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தை தமிழக பாஜக கையில் எடுத்து திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற கலவரம் ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த தவறுகள் என்னென்ன என்பது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தவறு 1 - கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் பள்ளி மாணவி இறந்தவுடனேயே விசாரணையை முடுக்கி விட்டிருக்க வேண்டும். அக்குடும்பத்தினரிடம் அரசு தரப்பு அல்லது காவல்துறை, நீதி நிலைநாட்டப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: திமுக அரசு முறையாக கையாளவில்லை.. கள்ளக்குறிச்சி விவகாரம் - டிடிவி தினகரன் ஆவேசம் !
தவறு 2 - மூன்று நாட்கள் நிலைமையின் தீவிரத்தை உணராமல், அலட்சியமாக இருந்து. விவகாரத்தை கொழுந்து விட்டு எரிய வைத்தது. தவறு 3 - 5000 பேருக்கும் மேல் கூடும் வரையில் அது குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்த நுண்ணறிவு பிரிவு முடங்கி போனது என்பதை உணராமல் இருப்பது. தவறு 4 - சட்டத்தை தன் கையிலெடுத்த வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல், தமிழகத்தை பெரும் பதட்டத்தில் ஆழ்த்திய குற்ற உணர்வு இல்லாமல் வீராப்பு பேசுவது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத வெட்கக்கேடான அவல நிலையில் தமிழக அரசும், காவல்துறையும் முடங்கிப்போய் உள்ளது.” என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர்கள் வம்புகள்.. தமிழகத்தில் மூக்கை நுழைக்காதீங்க.. தமிழிசைக்கு முரசொலி விட்ட டோஸ்.. கொந்தளித்த தமிழிசை!