ஓயாத மரண ஓலம்! பலி எண்ணிகை 60ஆக உயர்வு! தொடரும் கைது நடவடிக்கைகள்! கள்ளக்குறிச்சியை அலறவிடும் சிபிசிஐடி.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் வாங்கி குடித்து 58 உயிரிழந்த நிலையில் இன்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்பாஷா, மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மெத்தனால் வழங்கிய ஆலை உரிமையாளர்கள் உள்பட 7 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் வாங்கி குடித்து 58 உயிரிழந்த நிலையில் இன்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்பாஷா, மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: “தில் இருந்தா என் மேல வண்டிய ஏத்துங்கடா பாப்போம்” வீரவசனம் பேசி சாலையில் மட்டையான ஆசாமி
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை சங்கிலி தொடர் போல் தொடர்ந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 14 நபர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விஷச்சாரயத்திற்கு மெத்தனால் வழங்கிய பிரபல தொழிற்சாலை கண்டுபிடிப்பு.! உரிமையாளர்களை தட்டி தூக்கிய போலீஸ்
இந்நிலையில் நேற்று இரவு இவ்வழக்கு தொடர்பாக பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதமன், சிவக்குமார் ஆகிய 7 பேரை கைது செய்யப்பட்டு அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைத்தனர். இதுவரை கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.