Asianet News TamilAsianet News Tamil

விஷச்சாரயத்திற்கு மெத்தனால் வழங்கிய பிரபல தொழிற்சாலை கண்டுபிடிப்பு.! உரிமையாளர்களை தட்டி தூக்கிய போலீஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் மெத்தனால் கள்ளத்தனமாக விற்பனை செய்த சென்னை மாதவரம் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Owner of factory which supplied methanol responsible for death of Kallakurichi illicit liquor arrested KAK
Author
First Published Jun 24, 2024, 12:51 PM IST | Last Updated Jun 24, 2024, 12:51 PM IST

கள்ளச்சாராய மரணம் 59ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷச்சாராயம் அருந்தி தற்போது வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவல் அதிகாரிகளும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து கள்ளச்சாராய மரண வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து கள்ளச்சாராய விற்றவர்கள் முதல் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விற்றவர், வாங்கியவர்கள் என அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சூப்பர் திட்டம்.!! 10ஆயிரம் கி.மீட்டர் ஊரக சாலைக்கு அடித்தது ஜாக்பாட்- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Owner of factory which supplied methanol responsible for death of Kallakurichi illicit liquor arrested KAK

முக்கிய குற்றவாளிகள் கைது

இதில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். இதனையடுத்து மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது. யாருக்கெல்லாம் விநியோகம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அய்யாசாமி மற்றும் தெய்வாரா என்ற இந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மெத்தனாலை ஆந்திரா மற்றும் மாதவரத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வாங்கி பல்வேறு இடங்களுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்ல உதவியுள்ளனர். 

Owner of factory which supplied methanol responsible for death of Kallakurichi illicit liquor arrested KAK

மாதவரம் தொழிற்சாலையில் வாங்கிய மெத்தனால்

இவர்களிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மாதவரம் ஶ்ரீ  கெமிக்கல் எண்டர் பிரைசஸ்  நிறுவனத்தில்  இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலையில் இருந்து மெத்தனால் வாங்கிய சிவக்குமார், மாதேஷ்க்கு கொடுத்துள்ளார். இதே போல இந்த நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் இருந்து மெத்தனால் இறக்குமதி செய்து பல தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஶ்ரீ  கெமிக்கல் எண்டர் பிரைசஸ்  நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் மெத்தனால் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் உரிமையாளர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணைக்காக கள்ளக்குறிச்சிக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் கள்ளச்சாராய வழக்கில் இது வரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரம் தான் கெடு.. மன்னிப்பு கேட்கனும்- ராமதாஸ், அன்புமணிக்கு செக்.! திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் நோட்டீஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios