திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிரிழந்த பூர்ண சந்திரன் 16ம் நாள் துக்க அனுசரிப்பில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்றார். பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் .
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிரிழந்த பூரண சந்திரன் 16ம் நாள் துக்க அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூரண சந்திரன் தியாகம் செய்துள்ளார். பூர்ண சந்திரன் முருகனுக்காக தனது உடலையே தீபமாக எரித்துக் கொண்டு உள்ளார். உயிரிழந்த பூரண சந்திரனின் குடும்பத்தினர் திமுக கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் அவர் உயிரிழந்து இத்தனை நாட்கள் ஆகியும் தமிழக அரசு சார்பிலும் திமுக கட்சி சார்பிலும் யாரும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் அரசு உயிரிழந்த பூரண சந்திரன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும். உயிரிழந்த பூரண சந்திரன் தவறு செய்துவிட்டு செல்லவில்லை. கடவுள் இல்லை என்று கூறிய பெரியார் சிலை முன்பு தனது உயிரை தியாகம் செய்து உள்ளார். அவரது தியாகம் வீண் போகாது.
ஒரு லட்சத்திரனின் வேண்டுகோளை போல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அரசு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்ற தவறினால் இந்து முன்னணியும் முருக பக்தர்கள் பொதுமக்களும் சேர்ந்து மலையில் தீபம் ஏற்றுவோம். முருக பக்தர்கள் மதுரை சேர்ந்தவர்கள் திமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். திருமாவளவன் எம்.பி. சு. வெங்கடேசன் நக்சலைட் சிந்தனை கொண்டவர்கள். முருக பக்தர்களை கொச்சைப்படுத்தி வருபவர்களுக்கு அதற்கான பதிலடி முருக பக்தர்கள் கொடுப்பார்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.


