முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் நடிகருமான மு.க. முத்து  தந்தையுடனான மனஸ்தாபத்தால் தனிமையில் வசித்த அவர், ஜெயலலிதாவிடம் உதவி கோரி ₹5 லட்சம் பெற்ற சம்பவம் தெரியுமா.?

Jayalalithaa helped M K Muthu : மு.க. முத்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மூத்த மகனாவார். 1948 ஆம் ஆண்டு பிறந்த மு.க.முத்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் இருந்துள்ளார். மு.க. முத்து 1970-களில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். "பூக்காரி", "பிள்ளையோ பிள்ளை", "சமையல்காரன்", "அணையா விளக்கு" உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும், அவர் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார், உதாரணமாக "நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா" மற்றும் "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க" போன்ற பாடல்கள் மக்களிடையே பிரபலமடைந்தது.

மு க முத்துவிற்கு உதவிய ஜெயலலிதா 

ஒரு கட்டத்தில் கடுமையான குடி நோயாளியாக மாறிய மு.க.முத்து பணம் இல்லாமல் சிரமப்பட்டார். தனிப்பட்ட சில காரணங்களால் தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மு.க.முத்து தனியாக வசித்து வந்தார். இதனால் பணம் இல்லாமல் சிரமப்பட்டார். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து மு.க. முத்து உதவி கேட்டார். அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஜெயலலிதா உதவினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.