இனி அதிமுக அவ்வளவு தான்..தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை!அட்ராசிட்டி செய்யும் ஜெ.மகள் எனக் கூறும் ஜெயலட்சுமி
அதிமுக 4ஆக பிளவு பட்டதால் புதிய கட்சி தொடங்கி இருப்பதாக தெரிவித்த ஜெ.ஜெயலட்சுமி, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக கூறினார்.

அட்ராசிட்டி செய்யும் ஜெ.மகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மகள் எனக்கூறி வரும் ஜெயலட்சுமி என்ற பெண் இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை தந்தார். அப்போது ஆளுயுர மாலை மற்றும் சால்வை அணிவித்து அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். மேலும் பெண்கள் தங்கள் குழந்தைகளை கொடுத்து அவரிடம் செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி
இதனை தொடர்ந்து ஜெயலட்சுமி பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.ஜெயலட்சுமி. எனது அம்மா ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு வந்திருப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நிர்வாகிகள் சந்திக்க இருப்பதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எனது அம்மாவின் கட்சி நலிவடைந்து 4ஆகி ஆகியிருப்பதாக தெரிவித்தார். இதனால் தான் தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்ய உள்ளதாக கூறினார்.மக்களுடைய ஆதரவு தனக்கு இருப்பதால் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும் தனித்து தான் போட்டியிடுவேன் என ஜெ.ஜெயலட்சுமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள்.! இரட்டை ரோசா சின்னத்தோடு புதிய கட்சி தொடங்கிய ஜெ.ஜெயலட்சுமி