நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள்.! இரட்டை ரோசா சின்னத்தோடு புதிய கட்சி தொடங்கிய ஜெ.ஜெயலட்சுமி
ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்பவர் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும், கட்சியின் சின்னம் இரட்டை ரோஜா எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணமும் - சர்ச்சையும்
மறைந்த அதிமுக பொதுச்செயாலளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான் தான் உண்மையான வாரிசு, நான் தான் உண்மையான மகள், உண்மையான மகன் என கூறி பலரும் வெளியே வர தொடங்கினார். ஆனால் இதில் அனைவரும் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு தங்களை வெளிக்காட்டிக்கொள்ள செய்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.
அதே நேரத்தில் ஒரு சிலரின் உருவ ஒற்றுமையை வைத்து ஜெயலலிதாவின் மகளாக இவர் இருப்பாரோ என மக்களும் பேச ஆரம்பித்தனர். அந்த வகையில் ஜெ.ஜெயலட்சுமி என்பவர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதிமுகவிற்கு போட்டியாக புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நான் தான் ஜெயலலிதாவின் மகள்
இது தொடர்பாக கொடைக்கானில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு போட்டியாக இரட்டை ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் இருந்து வாங்குவோம் என கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லையென தெரிவித்தவர், தனித்து 39 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக கூறினார்.
இதனை தொடர்ந்து நீங்கள் ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு என்ன ஆதாரம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சோபன் பாபு எனது தந்தை. ஜெயலலிதா மகள் என்பதற்கான டிஎன்ஏ டெஸ்ட் உள்ளிட்டவற்றை நீதிமன் றத்தில் கொடுக்க இருப்பதாக கூறினார்.
டிஎன்ஏ மாதிரி கொடுக்க தயார்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இரு முறை சந்தித்துள்ளதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை சந்தித்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா பயன்படுத்திய ஆடைகள் தன்னிடம் இருப்பதாகவும், மேலும் ஜெயல்லிதாவின் டைரியும் தன்னிடம் இருப்பதாக கூறினார். பல்வேறு திரைப்படங்களில் ஜெயலலிதாநடிகையாக நடித்த போது அவர் வசித்த வீட்டில் நான் வசித்ததாகவும் தெரிவித்தார். ஒரு சில காரணங்களுக்காக நான் வெளிப்படையாக அவரது மகள் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லையெனவும் ஜெ.ஜெயலட்சுமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
நான் பிளான் பண்ணி இறங்கினால் நாம் தமிழர் கட்சி காலியாகி விடும் - வீரலட்சுமி