Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறுகிறது.. பிபோர்ஜோய் என்ற பெயருக்கு இப்படி ஒரு ஆர்த்தமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.

It will become a severe storm in the next 24 hours..  Indian Meteorological Department
Author
First Published Jun 7, 2023, 10:50 AM IST

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த பிபோர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

இதையும் படிங்க;- Weather Update: அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல்! சூறாவளியுடன் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?

It will become a severe storm in the next 24 hours..  Indian Meteorological Department

தற்போது அரபிக் கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜோய் புயலானது வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.  இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- ஊருக்கு போறீங்களா.. இனி கவலையே வேண்டாம்.. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாஸ் அறிவிப்பு..!

It will become a severe storm in the next 24 hours..  Indian Meteorological Department

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மணிக்கு, 100 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று, அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலும்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

It will become a severe storm in the next 24 hours..  Indian Meteorological Department

பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது மேலும் ஒருவாரம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios