ஊருக்கு போறீங்களா.. இனி கவலையே வேண்டாம்.. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாஸ் அறிவிப்பு..!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.

Even if you travel a distance of 200 km you can travel by booking government buses..! minister sivasankar

அரசு விரைவு பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு சேவை இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்? செந்தில் பாலாஜி பதவி பறிப்பு?

Even if you travel a distance of 200 km you can travel by booking government buses..! minister sivasankar

இதன் மூலம் தினசரி சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க;-  தயக்கம் காட்டும் சசிகலா: திருமண விழாவில் திருப்பம் ஏற்படுவதில் சிக்கல்!

Even if you travel a distance of 200 km you can travel by booking government buses..! minister sivasankar

இதன் காரணமாக  இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும். மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  நுரையீரல் அழுகி செத்தவங்க குடும்பம் மூலம் கிடைக்குற காசுல தான் அரசே இயங்குதுனு சொல்ல வெட்கபடணும்.. வேல்முருகன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios