Weather Update: அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல்! சூறாவளியுடன் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?
சென்னையில் நேற்று அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆனாலும் மாலை வேளையில் மழை பெய்துவருகிறது.
அரபிக்கடலில் பிபார்ஜாய் (Biparjoy) புயல் உருவாகியுள்ளது. ஆனால், இந்தப் புயலால் தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு பிபார்ஜாய் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பெயரிடப்பட்டுள்ளது. பிபார்ஜாய் என்பதற்கு பேரழிவு என்று அர்த்தம் சொல்லப்படுகிறது.
கோவாவில் இருந்து 900 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு திசையில் பிபார்ஜாய் புயல் மையம் கொண்டுள்ளது. மும்பையில் இருந்து தென்மேற்கு திசையில் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் புயல் காணப்படுகிறது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரும் இந்தப் புயல், வடக்கு நோக்கி செல்கிறது.
எஞ்சின் கோளாறால் ரஷ்யாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!
இதனால், பிபார்ஜார் புயல் அதிதீவிர புயலாக மாறினாலும் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும். சில இடங்களில் சராசரியைக் காட்டிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக இருக்கும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அதன்படி, சென்னையில் செவ்வாய் மாலை முதல் பரவலாக மழை பெய்திருக்கிறது.
ஒடிசா விபத்துக்குப் பின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மீண்டும் இயக்கம்
சென்னையின் பல பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம், ஆலந்துர், மீனம்பாக்கம், மேடவாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைப்பொழிவு காணப்பட்டது.
ஆனாலும், நேற்று தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவின் இணையப் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டும்! அறிக்கையில் தகவல்