என்ஐஏ ரெய்டு நிறைவு.! சாட்டை துரைமுருகன், நாதக நிர்வாகிகள் வீட்டில் ஆவணங்கள் பறிமுதலா.? நேரில் ஆஜராக சம்மன்
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்ட நிலையில், ஆவணங்கள் மற்றும் செல்போனை எடுத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற 7 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி- என்ஐஏ சோதனை
வெளிநாட்டில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் நிர்வாகிகளோடு தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் சாட்டை துரைமுருகன் வீடு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை செய்தனர். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான முருகனின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்.?
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீட்டில் இன்று அதிகாலை, என்ஐஏ துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், 5அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்களை கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சாட்டை துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில், வீட்டில் இருந்த அவரது மனைவியிடம், வரும், 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் துரைமுருகன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர்.
நேரில் ஆஜராக சம்மன்
இதேபோல விஷ்ணு, இசை மதிவாணனையும் வருகிற 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டு சென்றனர்.மேலும், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கும், இதே விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வரும்,ஏழாம் தேதி ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் தபாலில் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதையும் படியுங்கள்