பிரபல யூடியூபர் இர்பான சாப்பிட்ட கடையில் இருந்து கெட்டுப்போன இறைச்சி கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்திக்குறித்து இர்பான் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பான சாப்பிட்ட கடையில் இருந்து கெட்டுப்போன இறைச்சி கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்திக்குறித்து இர்பான் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் ரோஸ்வாட்டர் எனும் தனியார் உணவு விடுதியில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த இறால் அழுகிய நாற்றம் அடித்துள்ளது. இதையடுத்து அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் அளித்ததன்பேரில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் சுமார் 45 கிலோ கெட்டு போன இறைச்சி, மீன், கோழி கறி ஆகியவற்றையும் 10 கிலோ இறாலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே இந்த கடையில் பிரபல யூடியூபரான இர்பான், உணவை சாப்பிட்டுவிட்டு ரிவ்யூ செய்திருந்தார். அப்போது, அவர் உணவின் தரமும் சுவையும் நன்றாக இருக்கிறது என்றார். மேலும் பார்வையாளர்களையும் அங்கு சப்பிட பரிந்துரைத்தார். ஆனால் அங்கு உணவு துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கெட்டுபோன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டதால் பணம் வாங்கிக்கொண்டு பார்வையாளர்களை தவறாக இர்பான் வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: Irfan's view யூடியூப் சேனலுக்கு என்னாச்சு... திடீரென முடக்கப்பட்டது ஏன்? - இர்பான் விளக்கம்

மேலும் பலர் இவ்வாறு பொய்யாக ரிவியூ கொடுத்த இர்பான மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தன் மீதான குற்றசாட்டு குறித்து யூடியூபர் இர்பான விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது ஹாய் செய்தி சேனல்களே என்று டைட்டிலுடன் கூடிய வீடியோவில், நான் அந்த உணவு விடுதியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சப்பிட்டு ரிவ்யூ விடியோ செய்திருந்தேன். அதனை தற்போது சுட்டிகாட்டுவதன் காரணம் என்ன? உணவை ருசித்து சம்பாதிப்பவர் என்று போட்டிருக்கிறீர்கள். ஆம் நான் அதான் செய்கிறேன். ஆனால் தற்போது ரோஸ்வாட்டர் ஹோட்டலில் கெட்டு போன இறைச்சி கிடைத்ததற்கும் உணவை ருசித்து சம்பாதிப்பவர் என்று எங்களை சுட்டிகாட்டுவதற்கும் என்ன சம்பந்தம். நாங்கள் உணவை ருசிப்பவர்களே தவிர உணவை ஆராய்சி செய்யும் அதிகாரிகள் இல்லை.
இதையும் படிங்க: மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..

நான் இதுவரை செய்த உணவு ரிவ்யூ வீடியோக்களில் உணவை சரியில்லை என்று சொன்னது கிடையாது. ஆனால் அதேநேரத்தில் கெட்டுப்போன உணவை நல்லா இருக்கு என்றும் சொன்னது கிடையாது. என்னை ஒரு தனியார் செய்தி சேனல் ஒன்று என்னை ஓசி சோறு என்று கூறியுள்ளது. எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்? இதுவரை எந்த ஹோட்டல் உரிமையாளராவது நான் ஓசியில் சாப்பிட்டதாக கூறினார்களா? இல்லை நீங்கள் எனக்கு ஓசி சோறு போட்டீர்களா? என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை இர்பான முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட ஒருவர் அங்கு சாப்பாடு நல்லா இருக்கு என்று கூறுகிறார். நல்லா இருக்கு என்று கூறியவரை எப்படி நீங்கள் குற்றம்சாட்ட முடியும். அதுவும் நாங்கள் உணவு துறை அதிகாரிகள் அல்ல. அப்படி இருக்கையில் எங்களை எதை வைத்து குற்றம்சாட்டுகிறீர்கள்? என்று செய்திசேனலையும் ஒரு செய்தி நிறுவனத்தையும் கடுமையாக சாடியுள்ளார்.
