NIA RAID :தமிழகத்தில் மீண்டும் களம் இறங்கிய என்ஐஏ.!10க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனைக்கு காரணம் என்ன.?
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும், தீவிரவாத செயல்களை தடுக்கவும் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலை என்ஐஏ அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் என்ஐஏ திடீர் ரெய்டு
தீவிரவாத செயல்களை தடுக்கவும், வெளிநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவாகவும் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுபவர்களின் வீடுகளில் அவ்வப்போது என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையின் போது செல்போன், கணிணி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்யப்படும்,
அதில் தீவிரவாதத்தை ஊக்குவித்து கருத்துகளை வெளியிட்டிருந்தாலோ அல்லது குண்டு வெடிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு திட்டமிட்டிருந்தாலோ கைது செய்யப்படுவார்கள். அந்த வகையில் என்ஐஏ இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் திருச்சி,தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வார விடுமுறை, ஆடி அமாவசைக்கு வெளியூர் செல்லனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ப்பு.?
இந்த சோதனையானது பாஜக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட தஹீரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரை என்.ஐ.ஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிரும் தமிழகம்! மிரளும் பொதுமக்கள்! ஒரே மாதத்தில் 8 அரசியல் பிரமுகர்கள் கொடூர கொலை!