MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வார விடுமுறை, ஆடி அமாவசைக்கு வெளியூர் செல்லனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?

வார விடுமுறை, ஆடி அமாவசைக்கு வெளியூர் செல்லனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?

ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்தவகையில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 01 2024, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிறப்பு பேருந்து அறிவிப்பு

வார விடுமறை மற்றும் ஆடி அமாவசையையொட்டி கோயில் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழ இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

02/08/2024 (வெள்ளிக்கிழமை) 03/08/2024 (சனிக்கிழமை) 04/08/2024 ஞாயிறு வார விடுமுறை மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பாக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

25

திருவண்ணாமலைக்கு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 02/08/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும், 03/08/2024 (சனிக்கிழமை) 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 

35
kilambakkam

kilambakkam

கோயம்பேட்டில் இருந்து பேருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 02/08/2024 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் 03/08/2024 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

45

சிறப்பு பேருந்து எத்தனை.?

இதன்படி வருகின்ற 04/08/2024 அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9,451 பயணிகளும் சனிக்கிழமை 3,570 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,257 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 
 

55
Kilambakkam

Kilambakkam

முன்பதிவு செய்திடுங்கள்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேமுதிக-வுக்கு அடித்த ஜாக்பாட்.. கொண்டாட்டத்தில் விஜய பிரபாகரன்.. திமுக கூட்டணியின் மாஸ்டர் பிளான்..!
Recommended image2
எஸ்.பி.வேலுமணி விரித்த வலை... கோட்டை விட்ட அதிமுக..! அதிருப்தியில் அமித் ஷா..!
Recommended image3
வெளியான புதிய சர்வே.. தமிழகத்தை கைப்பற்றுவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved