MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Suburban Trains: சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!

Suburban Trains: சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!

Suburban Trains: சென்னையில் ஜூன் 8ஆம் தேதி (நாளை) முதல் ஜூன் 12ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 07 2026, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மக்களுக்கு கைகொடுக்கும் புறநகர் ரயில்கள்
Image Credit : Google

மக்களுக்கு கைகொடுக்கும் புறநகர் ரயில்கள்

சென்னையில் கடற்கரை‍‍-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை‍-வேளச்சேரி, வேளச்சேரி-பரங்கிமலை ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் கைகொடுத்து வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை இருந்தாலும் புறநகர் ரயில்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் சேவையை வழங்கி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
Image Credit : Asianet News

சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்களால் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பாதையில், தண்டவாளக் கடவைகளை நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஜூன் 8-ஆம் தேதி (நாளை) தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு இப்பணிகள் நடைபெறவிருக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பு கருதி, இந்த குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் (EMU) முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்களை விரிவாக பார்ப்போம்.

Related Articles

Related image1
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
Related image2
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
34
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
Image Credit : Indian Railway

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

அரக்கோணம் - திருத்தணி: அதிகாலை 4:00 மற்றும் 5:00 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்.

திருத்தணி - அரக்கோணம்: இரவு 9:15 மற்றும் 11:10 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்படும் ரயில்கள்.

திருத்தணி - சென்னை: காலை 6:30 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் (MMC) வரும் ரயில்.

44
திருவாலங்காடு வரை மட்டுமே இயங்கும் ரயில்கள் (பகுதிவாரியாக ரத்து)
Image Credit : Indian Railway

திருவாலங்காடு வரை மட்டுமே இயங்கும் ரயில்கள் (பகுதிவாரியாக ரத்து)

அரக்கோணம் வரை செல்ல வேண்டிய கீழ்க்கண்ட ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக திருவாலங்காடு நிலையத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4:05, பிற்பகல் 2:25 மற்றும் மாலை 06:15 மணிக்குப் புறப்படும் ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே செல்லும்.

ஆவடியில் இருந்து காலை 06:20 மணிக்குப் புறப்படும் ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து காலை 6:30, 9:10, 10:30, 11:00, நண்பகல் 12:40, பிற்பகல் 01:25, மாலை 3:45, 4:45, 5:15, 5:45, 6:05, 6:40, இரவு 7:30, 8:20, 09:10, 10:00 மற்றும் இரவு 10:55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
தமிழ்நாடு
தென்னக இரயில்வே
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
Recommended image2
Now Playing
Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
Recommended image3
Now Playing
"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
Related Stories
Recommended image1
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
Recommended image2
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved