MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TASMAC: இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!

TASMAC: இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!

TASMAC: டாஸ்மாக்கில் வருவாய் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தவெக அரசு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 07 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அரசுக்கு வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகள்
Image Credit : Asianet News

அரசுக்கு வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் செல்வம் கொழிக்கும் துறையாக டாஸ்மாக் உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. அரசுக்கு வருமான ஈட்டித் தருவதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகித்து வருகிறது. டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு அதிகமாக பணம் வசூலிக்கப்படுவதாக திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிகளிலும் தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது.

தவெக அரசின் அதிரடி நடவடிக்கை

இப்போதைய முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தேர்தலுக்கு முன்பாக இதனை மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைத்திருந்தார். இதன்பின்பு தான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் டாஸ்மாக்கில் வருவாய் முறைகேட்டைத் தடுக்க அரசுக்குக் கூடுதலாக ரூ.1,200 கோடி வருமானம் வரும் வகையில் தவெக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
டாஸ்மாக் வருவாய் முறைகேடு நிறுத்தப்படும்
Image Credit : Asianet News

டாஸ்மாக் வருவாய் முறைகேடு நிறுத்தப்படும்

அதாவது இதற்கு முந்தைய ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானப் பெட்டிகளுக்கு (Cases) முறையற்ற வகையில் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை அரசு கணக்கிற்குச் செல்லாமல், வேறு வழிகளில் "கட்சி நிதி" என்ற அந்தந்த ஆட்சியாளர்களின் கட்சிக்கு சென்று வந்தது. 

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மதுபானங்கள் பெட்டி ஒன்றுக்கு ரூ.90, பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.40, ஒயின் பெட்டி ஒன்றுக்கு ரூ.20 அரசு கஜானாவுக்கு செல்லாமல் அந்தந்த கட்சிகளுக்கு நிதியாக சென்று வந்தது. இந்த முறையற்ற வசூல் மூலம் மட்டும் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வரை தனியாருக்கு அல்லது குறிப்பிட்ட தரப்பிற்கு சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Related Articles

Related image1
TASMAC:'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
Related image2
TASMAC Shop: டாஸ்மாக் மூடலை தொடர்ந்து! முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி! இனி ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது!
33
அரசுக்கு கூடுதலாக ரூ.1,2000 கோடி வருமானம்
Image Credit : Asianet News

அரசுக்கு கூடுதலாக ரூ.1,2000 கோடி வருமானம்

அரசுக்குச் சேராமல் மறைமுகமாக சென்று கொண்டிருந்த இந்த பிரம்மாண்டத் தொகையை, இனி நேரடியாகத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கணக்கிலேயே கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அதிரடி நடவடிக்கை மூலம் மறைமுகமாக வசூலிக்கப்பட்ட நிதி இனி முழுமையாகத் தடுக்கப்படும். இந்தத் தொகை நேரடியாக அரசுப் பொதுக் கணக்கில் சேர்க்கப்படும்.இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அரசின் இந்த நடவடிக்கை ஒரு தரப்பினர் மத்தியிலும், குடிமகன்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suburban Trains: சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
Recommended image2
Now Playing
அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
Recommended image3
Now Playing
Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
Related Stories
Recommended image1
TASMAC:'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
Recommended image2
TASMAC Shop: டாஸ்மாக் மூடலை தொடர்ந்து! முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி! இனி ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved