MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Tamil Nadu News
  • TASMAC Shop: டாஸ்மாக் மூடலை தொடர்ந்து! முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி! இனி ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது!

TASMAC Shop: டாஸ்மாக் மூடலை தொடர்ந்து! முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி! இனி ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது!

TASMAC Shop: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : May 14 2026, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாஸ்மாக் கடைகள்
Image Credit : Asianet News

டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் 4700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் அதிக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகினர். இதன் காரணமாக கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்வங்கள் அதிகரித்து வருவதால் உடனே மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
717 டாஸ்மாக் கடைகள் மூடல்
Image Credit : ANI

717 டாஸ்மாக் கடைகள் மூடல்

இதனிடையே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பொறுப்பேற்ற இரண்டாவது நாளிலேயே அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.

Related Articles

Related image1
TVK Vs DMK: பெரும்பான்மை நிரூபித்த கையோடு.. தவெக-வுக்கு உச்சநீதிமன்றம் வெளியிட்ட மற்றொரு குட்நியூஸ்.. அதிர்ச்சியில் திமுக
Related image2
TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!
35
மாவட்ட வாரியாக விவரம்
Image Credit : Asianet News

மாவட்ட வாரியாக விவரம்

அதன்படி தமிழகத்தில் 5 மண்டலங்களில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. சென்னை மண்டலத்தில் சென்னை தெற்கில் 14 , வடக்கில் 18, மத்தியில் 15, காஞ்சிபுரம் வடக்கில் 12, தெற்கில் 7 , திருவள்ளூர் மேற்கில் 4 , கிழக்கில் 29 என 99 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. கோவை மண்டலத்தில் கரூரில் 8, நீலகிரியில் 27, கோவை தெற்கில் 21, வடக்கில் 48, ஈரோட்டில் 39, திருப்பூரில் 30 என 173 டாஸ்மாக் கடைகளும், மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கில் 13ம், சிவகங்கையில் 18, கன்னியாகுமரியில் 18, நெல்லையில் 33, தூத்துக்குடியில் 63, மதுரை தெற்கில் 32, விருதுநகரில் 37, ராமநாதபுரத்தில் 29, திண்டுக்கல்லில் 26 என 281 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

45
4765லிருந்து 4048 குறைவு
Image Credit : Asianet News

4765லிருந்து 4048 குறைவு

அதேபோல் சேலம் மண்டலத்தில் வேலூரில் 6, தர்மபுரியில் 7, கிருஷ்ணகிரியில் 6, அரக்கோணத்தில் 7, திருவண்ணாமலையில் 20, சேலத்தில் 20, நாமக்கல்லில் 14 என 80 டாஸ்மாக் கடைகளும், திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூரில் 6, பெரம்பலூரில் 5, திருவாரூரில் 5, விழுப்புரத்தில் 11, நாகப்பட்டினத்தில் 4, திருச்சியில் 16, கடலூரில் 21, புதுக்கோட்டையில் 16 என 84 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை 4765லிருந்து 4048ஆக குறைக்கப்படுகிறது.

55
 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை
Image Credit : our own

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை

இந்நிலையில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை ஊழியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில்: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்னை கடைகள் மற்றம் மதுக்கூடங்களில் விதிகள் 2003 விதி எண் 11A-ன் படி வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் 21 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடைப்பணியாளர்கள் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
TVK Vs DMK: பெரும்பான்மை நிரூபித்த கையோடு.. தவெக-வுக்கு உச்சநீதிமன்றம் வெளியிட்ட மற்றொரு குட்நியூஸ்.. அதிர்ச்சியில் திமுக
Recommended image2
TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved