MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!

TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் இந்த நடவடிக்கையை அன்புமணி வரவேற்றுள்ளார்.

3 Min read
Author : vinoth kumar
Published : May 12 2026, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
Image Credit : Asianet News

717 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற மறுநாளே யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார். முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையிர் மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
முழு மதுவிலக்கு
Image Credit : our own

முழு மதுவிலக்கு

அதாவது தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலம் என்ற உன்னத இலக்கை நோக்கிய தமிழ்நாட்டின் பயணத்திற்கு நம்பிக்கையளிக்கும் தொடக்கமாக இது அமைந்துள்ளது.

Related Articles

Related image1
TVK : ஆட்சிக்கு வந்ததும் தவெக-வுக்கு முதல் அடி; திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பங்கேற்க ஐகோர்ட் தடை!
Related image2
CM Vijay: பள்ளி, கல்லூரி அருகில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட முaதல்வர் விஜய் உத்தரவு..!
37
4048 டாஸ்மாக் கடைகளாக குறைப்பு
Image Credit : Asianet News

4048 டாஸ்மாக் கடைகளாக குறைப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம் & ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த விஜய் அவர்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் இந்தக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 4765லிருந்து 4048 ஆக குறையும். உண்மையாகவே இது மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை தான்.

47
ரொம்ப மகிழ்ச்சி
Image Credit : our own

ரொம்ப மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்ட மூன்று அறிவிப்புகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நான், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். முதலமைச்சர் அவர்கள் நேற்று என்னை சந்தித்த போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் ஒரு மாணவனை சக மாணவர்கள் மது போதையில் குத்தி படுகொலை செய்தது தொடர்பான அறிக்கையிலும் இதை வலியுறுத்தியிருந்தேன். மது போதையை ஒழிக்க வேண்டியதன் தேவையை முதலமைச்சர் அவர்களும் உணர்ந்து மதுக்கடைகளை மூட ஆணையிட்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 8,000க்கும் கூடுதலாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் வாயிலாக பாதியாக குறைக்கச் செய்த பா.ம.க., இந்த நடவடிக்கையால் மேலும் மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.

57
முதல்வர் விஜய் துணிச்சலான நடவடிக்கை
Image Credit : our own

முதல்வர் விஜய் துணிச்சலான நடவடிக்கை

ஒரு மாணவன் பள்ளிக்கு செல்ல ஒன்று முதல் 2 கி.மீ பயணிக்க நேரிடும் போது, குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பது தான் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், சட்டம் & ஒழுங்கை நிலை நிறுத்தவும் இந்த துணிச்சலான நடவடிக்கை பயனளிக்கும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சமூகநீதி வழங்க முடியும்.

67
சட்டவிரோத மதுக்கடைகள்
Image Credit : Asianet News

சட்டவிரோத மதுக்கடைகள்

அதே நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பரவியுள்ள மது வணிகக் கட்டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 4765 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், அவற்றைக் கடந்து மாநிலம் முழுவதும் சந்துக்கடைகள் என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுக்கடைகள் செயப்பட்டு வருகின்றன. இவை தவிர மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்ட மதுக் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருவர் நினைத்தால் அடுத்த 2 நிமிடங்களில் மதுவை வாங்கிக் குடிக்க இந்தக் கட்டமைப்பு தான் காரணமாக உள்ளது. சந்துக் கடைகளும், மனமகிழ் மன்றங்களும் மூடப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக 717 மதுக் கடைகளை மூட முதலமைச்சர் ஆணையிட்டாரோ, அந்த நோக்கத்தை அடைய முடியாது என்பது திண்ணம்.

77
கள்ளச்சாராயம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது
Image Credit : Asianet News

கள்ளச்சாராயம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது

மது போதையின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும். மதுவுக்கு அடிமையான இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அதிலிருந்து மீட்காவிட்டால், அவர்கள் வெகுதூரம் பயணித்து சென்றாவது மதுவைக் குடிக்கத் துடிப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல், மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் கள்ளச்சாராயம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு அரசு
டிவி.கே. விஜய்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!
Recommended image2
AIADMK Split: திமுக ஆதரவுடன் EPS முதல்வராக திட்டமிட்டார்; சி.வி. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு..
Recommended image3
ADMK TVK Alliance: அதிமுக தவெக கூட்டணி? பறிபோகும் 24 அதிமுக MLA-க்கள் பதவி.! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்.!
Related Stories
Recommended image1
TVK : ஆட்சிக்கு வந்ததும் தவெக-வுக்கு முதல் அடி; திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பங்கேற்க ஐகோர்ட் தடை!
Recommended image2
CM Vijay: பள்ளி, கல்லூரி அருகில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட முaதல்வர் விஜய் உத்தரவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved