MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vs DMK: பெரும்பான்மை நிரூபித்த கையோடு.. தவெக-வுக்கு உச்சநீதிமன்றம் வெளியிட்ட மற்றொரு குட்நியூஸ்.. அதிர்ச்சியில் திமுக

TVK Vs DMK: பெரும்பான்மை நிரூபித்த கையோடு.. தவெக-வுக்கு உச்சநீதிமன்றம் வெளியிட்ட மற்றொரு குட்நியூஸ்.. அதிர்ச்சியில் திமுக

TVK Vs DMK: திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : May 13 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
Image Credit : Asianet News

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தொகுதியில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஒவ்வொரு சுற்றிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் திமுக முன்னாள் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதை அடுத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை
Image Credit : Asianet News

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

Related Articles

Related image1
EPS Vs SP Velumani: விஜய்க்கு ஆதரவு அளித்த SP வேலுமணி தரப்பு! எத்தனை பேர்? அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிபோகுமா?
Related image2
எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
35
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
Image Credit : Asianet News

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

45
பெரியகருப்பன் கேவியட் மனு
Image Credit : our own

பெரியகருப்பன் கேவியட் மனு

மற்றொரு புறம் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் முன்கூட்டியே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

55
 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
Image Credit : Google

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க தடை விதித்தது தவறானது என சீனிவாச சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கக்கூடாது, இது கடுமையானது கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். முதல்வர் விஜய் பெருபான்மை நிரூபித்த கையோடு உச்சநீதிமன்றமும் தவெக ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உச்ச நீதிமன்றம்
டிவி.கே. விஜய்
திமுக
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ADMK: கொறடா உத்தரவை மீறிய 25 அதிமுக எம்எல்ஏ-க்கள்.! பதவியை பறிக்கும் எடப்பாடி? பாயப்போகும் நடவடிக்கை.!
Recommended image2
TN Rain Alert : அக்னி நட்சத்திரம் முடியும்முன் மழை.. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அலர்ட்
Recommended image3
Now Playing
"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
Related Stories
Recommended image1
EPS Vs SP Velumani: விஜய்க்கு ஆதரவு அளித்த SP வேலுமணி தரப்பு! எத்தனை பேர்? அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிபோகுமா?
Recommended image2
எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved