உச்சத்தில் இருந்த தக்காளி விலை..!திடீரென 25 ரூபாய் குறைந்தது- காரணம் என்ன.?
தங்கத்தை போன்று நாளுக்கு நாள் தாக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 25 ரூபாய் குறைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திடீரென உயர்ந்த தக்காளி விலை
தக்காளி இல்லாமல் சமையல் செய்வது குடும்ப தலைவிகளுக்கு சாத்தியம் இல்லாத ஒன்று, சமையலில் ஒன்றுடன் ஒன்று பின்னி இருப்பது தக்காளி அந்தளவிற்கு தக்காளி சமையலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்தநிலையில் தக்காளியின் விலையானது பல மடங்கு அதிகரித்து பொதுமக்களை கவலையடைய செய்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்ட நிலையில், திடீரென பல மடங்கு அதிகரித்து 150 ரூபாயை தாண்டியது. இதன் காரணமாக தக்காளி இல்லாமல் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்டினி விநியோகமும் நிறுத்தப்பட்டது.
25 ரூபாய் குறைந்தது தக்காளி விலை
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன என விசாரித்த போது, வெயிலின் தாக்கம் காரணமாக வரத்து குறைவு ஏற்பட்டு, தக்காளி விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விளைச்சல் குறைவால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் 800 டன் ஆக இருந்த தக்காளி வரத்து, 300 டன் ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று 125 ரூபாயில் இருந்த தக்காளி விலை இன்று 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 550 டன் தக்காளி வந்ததால் 25 ரூபாய் விலை குறைந்துள்ளது. எனவே வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்தால் விலையானது இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல சின்ன வெங்காயம் 20 ரூபாய் குறைந்து 160 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பீன்ஸ் 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
சுற்றுசூழலை பாதுகாக்க விதையுடன் கூடிய பேனா தயாரிக்கும் திண்டுக்கல் இளைஞருக்கு குவியும் பாராட்டு