Asianet News TamilAsianet News Tamil

சுற்றுசூழலை பாதுகாக்க விதையுடன் கூடிய பேனா தயாரிக்கும் திண்டுக்கல் இளைஞருக்கு குவியும் பாராட்டு

சுற்றுச்சூழலை பாதுகாக்க  விதையுடன் கூடிய பேப்பர் பேனா தயாரிக்கும் திண்டுக்கல் மாவட்ட இளைஞர் சிவபாலனுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

a young man manufacturing a seed pen in dindigul district
Author
First Published Jul 18, 2023, 4:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த இளைஞர் சிவபாலன். படித்து முடித்தவுடன் இவருக்கு ஏதேனும் சிறுதொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் முதலீடு செய்ய அதிக பணம் தேவை என்பதால் சிறிய அளவில் முதலீடு செய்து தொழிலை துவங்க நினைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் பேனா தயாரிக்கலாம் என்ற எண்ணம் உதித்துள்ளது, 

இதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் கடன் பெற்று பேப்பர் பேனா தயாரிக்கும் தொழிலை துவக்கியுள்ளார். இதற்காக தனியாக வேலையாட்கள் வைத்துக்கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்களே பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

திண்டுக்கல்லில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்; இளம் பெண் தற்கொலை - பெற்றோர் கோரிக்கை

இதுகுறித்து சிவபாலன் கூறுகையில், ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளது. பால்பாய்ண்ட் பேனாக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுபவையாக உள்ளன. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட எண்ணினேன்.

இது 99.5 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாதது. பேப்பர் பேனா பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் அது மக்கிவிடும். இதன் சிறப்பம்சமாக பேப்பர் பேனாவின் பின்புறம் மாத்திரை குமிழியில் விதைகளை வைக்கிறோம். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் இந்த விதை முளைப்புதிறன் பெற்று செடி, மரமாக வளர்த்துவிடும். இதற்காக இலவம் பஞ்சு கூவா புல் அரளி பூவரசன் உள்ளிட்ட காட்டு மரங்களின் சிறிய விதைகளை பேப்பர் பேனாவின் பின்புறத்தில் வைக்கிறோம்.

தேனியில் தோட்ட தொழிலாளியை மிதித்து கொன்ற காட்டு யானை; கிராம மக்கள் கோரிக்கை

வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பேப்பர் பேனாவில் வாசகங்கள் பிரிண்ட் செய்து  தருகிறோம். பிறந்தநாள், திருமண விழாக்களுக்கு பரிசுப்பொருட்களாக ஆர்டர் தருபவர்கள் பெயர் பிரிண்ட் செய்தே பேப்பர் பேனா தயாரித்துதருகிறோம். ஒரு பேனா ரூ.5 க்கு விற்பனை செய்கிறோம். வாழ்த்துக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பேனா ஒன்று ரூ.10 க்கு விற்பனை செய்கிறோம். ஆன்லைன் மூலம் விற்பனை, பள்ளிகளை நேரடியாக தொடர்பு கொண்டும் விற்பனை செய்கிறேன். மேலும் நண்பர்கள் வட்டாரங்கள் மூலமும் ஆர்டர் பெற்று செய்துதருகிறேன்.

பேப்பர் பேனா மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படுவதுடன், அதில் இருக்கும் விதை மூலம் இயற்கை வளத்தையும் அதிகரிக்க முடியும், என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios