பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டு அதிபர் ஆட்சி நடைமுறைக்கு வரும் - ஆ.ராசா

பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்பட்டு, அதிபர் ஆட்சி முறை அமல்படுத்தப்படலாம் என ஆ.ராசா எச்சரித்துள்ளார். 

if bjp will win lok sabha elections 2024 then indian constitution law may be changed said a raja vel

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், திமுகவின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சுதந்திரா புரம் மற்றும் ஊமப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்த நிலையில், பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பண்ணாரி அருகே அதிகரிக்கும் காட்டு யானைகளின் மர்ம மரணம்; குட்டியுடன் சுற்றி திரிந்த நேர்ந்த சோகம்

அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜாதி, மதம், மொழி, பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அளிக்கக்கூடிய அரசியல் அமைப்பு சட்டம் ஓராண்டு காலமாக சுதந்திரம் பெற்ற போது தலைவர்கள் பேசி பேசி உருவாக்கியதாகவும் தற்பொழுது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதனை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடும் என குற்றம் சாட்டினார்.

என் தப்பு தான்; என்ன மன்னிச்சிருங்க - கரூரில் பெண்கள், சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்ட ஜோதிமணி

அப்படி அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்பட்டால் அதிபர் ஆட்சி முறை மட்டுமே இருக்கும். தேர்தல் என்பது ஒரே முறை தான். எதிர்த்து கேள்வி கேட்டால் சிறையில் அடைக்கப்படும் சூழல் உருவாகும். தற்பொழுது ஜனநாயகத்தில் உள்ள பல பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ஹரியானா முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இனி ஒரு முறை மீண்டும் மத்தியில் அட்சி செய்யும் அரசு தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனநாயகமே இருக்காது. 

எனவே ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்தியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டு வரும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை வலுப்படுத்த இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios